இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

Date:

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை இன்று (16) காலை புது டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது அவரது முதல் இந்திய அதிகாரப்பூர்வ பயணத்தின் போது ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த சந்திப்பு குறித்த எக்ஸ் பதிவில் இந்திய வெளிவிகார அமைச்சர்,

இலங்கைப் பிரதமரை சந்தித்தது மகிழ்ச்சி அளித்ததாகவும், இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்டவைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை  வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் கூறினார்.

எதிர்வரும் 18 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பயணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பும் அடங்கும்.

ஒக்டோபர் 17 அன்று NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றின் ஏற்பாட்டில் NDTV உலக உச்சி மாநாட்டிலும் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.

இதன்போது “நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்தல்” என்ற தலைப்பில் அவர் சிறப்புரை ஆற்றவும் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஹஜ் பயண முகவர் சங்கத்தின் தலைவராக அல்ஹாஜ் அம்ஜடீன் தெரிவு

2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவராக அம்ஜா...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்...