பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரியில் பாடசாலை ஊடகக் கழகம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அஸ்மி ஜவஹர்ஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அதிகாரி எம். ஏ பவாஸ் கலந்து கொண்டு அரசாங்கம் பாடசாலைகளில் உருவாக்கி வரும் ஊடகக் கழகங்கள் தொடர்பில் விளக்கமளித்ததோடு ஊடகவியலாளர் பியாஸ் முஹம்மத் மாணவர்களுக்கு ஊடகத்தின் தேவை தொடர்பில் உரையாற்றினார்.
இலங்கைக்கான குவைத் தூதரகத்தின் தூதரக அதிகாரி அஷ்ஷைக் பிர்தௌஸின் ஏற்பாட்டில் அல் இர்பான் மத்திய கல்லூரி பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.