உலகை மாற்றுவது அல்லது மாற்றத்திற்கு சரணடைவது என்ற சிந்தனையை உறுதியாக கடைப்பிடித்த ஜனாதிபதி அலிஜா இசெட் பெகோவிச்: ஒக்டோபர் 19இல் அவரது 100வது பிறந்த தினம்.

Date:

பிறப்பு மற்றும் வளர்ப்பு:

அலிஜா இசெட்பெகோவிச் 1925 ஆம் ஆண்டு பொஸ்னியாவின் பொஸ்னா க்ரோபாவில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். அவர் சரஜெவோவில் தனது இடைநிலைக் கல்வியை முடித்தார், பின்னர் சட்டம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.

அறிவுசார் ஆர்வங்கள் மற்றும் செயல்பாடு:

கம்யூனிசத்திற்கு எதிரான போராட்டமாக முஸ்லிம் இளைஞர் சங்கத்தை நிறுவினார், மேலும் அவரது செயல்பாடுகளுக்காக கைது செய்யப்பட்டார்.

அரசியல் மற்றும் சுதந்திரம்:

கம்யூனிச ஆட்சிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, அவர் தேசிய செயற்பாட்டு கட்சியை நிறுவினார் மற்றும் இன மோதல்கள் அதிகரித்த போதிலும், யூகோஸ்லாவியாவிலிருந்து சுதந்திரத்திற்கான முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார்.

தலைமை மற்றும் மரபு:

1990 முதல் 2000 வரை பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் ஜனாதிபதியாக பணியாற்றினார். தனது ஆழ்ந்த சிந்தனை மற்றும் இஸ்லாமிய பார்வையினால் வித்தியாசமாக  செயற்பட்டார். அவரது முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் ஏராளமான விருதுகளையும் பெற்றார்.

இறப்பு:

அக்டோபர் 19, 2003 அன்று தனது 78வது வயதில் மறைந்தார். சில செர்பிய பிரதிநிதிகளின் எதிர்ப்பின் காரணமாக அவரது மறைவுக்கு அதிகாரப்பூர்வ துக்கம் அறிவிக்கப்படவில்லை. அவரது மிகவும் குறிப்பிடத்தக்க கூற்றுகளில் ஒன்று
‘ஒரு முஸ்லிமுக்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன: உலகை மாற்றுவது அல்லது மாற்றத்திற்கு சரணடைவது.’

‘இஸ்லாமிய எழுச்சி- மற்ற எந்த எழுச்சியையும் போலவே – துணிச்சலான, புரட்சிகரமானவர்களின் கைகளால் மட்டுமே அடையப்படும், சாந்தகுணமுள்ளவர்களாலும் சரணாகதி உள்ளவர்களாலும் அது சாத்தியமாகாது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...