ஆக்கபூர்வமான கலந்துரையாடலுடன் நடைபெற்ற புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் பொதுக்கூட்டம் .

Date:

புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் பொதுக்கூட்டம் நேற்று (09) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரி பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத் தலைவர்களின் ஆசீர்வாத உரைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. கடந்த ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்தும் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய சில முக்கிய விடயங்கள் தொடர்பாகவும், குறிப்பாக மல்விலை கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு சர்வமத அமைப்பின் வாயிலாக வழங்கப்படக்கூடிய தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மாவட்ட அடிப்படையிலான சர்வமத மாநாட்டை நடத்துவது தொடர்பாகவும், அதற்காக மாவட்ட செயலாளர் மற்றும் முக்கியஸ்தர்களை அழைப்பது தொடர்பான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதோடு, சர்வதேச அளவில் எரிந்துகொண்டிருக்கும் காசா பிரச்சினை இலங்கையில் இனவாதத்தை தூண்டும் கருவியாக சில சக்திகளால் பயன்படுத்தப்படுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. அதேபோல், ஒருபால் உறவு LGBTQ இலங்கையில் அரச ஆதரவோடு பரவலாக்கப்படுவதற்கான முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இந்நிகழ்வை அமைப்பின் இணைப்பாளர் திருமதி முஸ்னியா சிறப்பாக நெறிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...