கொழும்பிலுள்ள இலங்கையின் துருக்கி தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட துருக்கியின் 102 ஆவது தேசிய தின நிகழ்வு நேற்று (29) கொழும்பு ஷாங்கிரிலா ஹோட்டலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இலங்கைக்கான துருக்கி தூதுவர் செமிஹ் லுட்ஃபு துர்குட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி கலந்து சிறப்பித்தார்.
இரு நாடுகளின் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டதையடுத்து, துருக்கி தூதுவர் வரவேற்புரையாற்றினார். துருக்கி ஜனாதிபதியின் தேசிய தினச் செய்தியும் வாசிக்கப்பட்டது.
அதன்பின் அமைச்சர் சுனில் செனவி சிறப்புரையாற்றியதுடன், இலங்கை மற்றும் துருக்கிக்கான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விசேட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


