கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு.

Date:

கொழும்பு 01 முதல் 15 வரை பல பகுதிகளுக்கு நாளைய தினம் (23) நீர் விநியோகம் தடைப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாளை (23) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரைப் பெறும் பிரதான பம்பிங் நிலையத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதால், பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவதுகொட, கோட்டே, ராஜகிரிய, மடிவெல, நுகேகொட, நாவல கொலன்னாவ, ஐடிஹெச் கொட்டிகாவத்த, அங்கொட வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு தலா ரூ. 25000!

மோசமான காலநிலை காரணமாக பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு...

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்டும் ஐ.நா!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன்...

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘ஓட்டிசம்’ அலகை மேம்படுத்த ரூ. 398.09 மில்லியன் ஒதுக்கீடு!

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய...

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி அலிஸன் ஹூக்கர் இலங்கை வருகை!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ...