கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியை பிணையில் விடுதலை செய்ய கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (13) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் தொடர்புடைய வழக்கு விசாரணைக்கு வந்தபோதே கல்கிஸ்ஸ நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அங்கு முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பின்னர், கல்கிசை நீதவான் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியை தலா ரூ. 100,000 சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
இச்சம்பவம் நடந்த நேரத்தில் சட்டத்தரணி, பொலிஸ் அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக அறிக்கை மூலம் பொலிஸ் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்துள்ளது.
மேலும் உண்மைகளை தெரிவிக்கும் விதமாக, சட்டத்தரணி இன்னும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கவில்லை என்று பொலிஸ் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.