நாட்டின் பல பகுதிகளில் சிறிதளவில் மழை!

Date:

இன்றையதினம் (29) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கு – மத்திய வங்காள விரிகுடாவில், உருவாகியுள்ள ‘மொந்தா’ சூறாவளி, நேற்று (28) நள்ளிரவு அளவில் (பிற்பகல் 11.30 மணிக்கு) ஆந்திரா மற்றும் யனான் பிரதேசம் ஊடாக நிலப் பகுதிக்குள் நுழைந்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக களுத்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...