ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

Date:

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுள்ளது.

குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று (07) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணை வெளியிடப்படுவதற்கு முன்னர் நடைபெறும் ஐந்தாவது இடைக்கால மதிப்பாய்வின் கட்டத்தை முன்னிட்டு இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இதேவேளை, பொருளாதார சரிவு நிலையிலிருந்து நாட்டை மீட்டு வளர்ச்சி நிலை நோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும், அதற்கான ஒரு மூலோபாய திட்டம் அரசாங்கத்திடம் உள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்ததுடன் அந்த திட்டத்தை வெற்றிகரமாக மாற்றுவதில் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆதரவை தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

மேலும் பொருளாதார மறுமலர்ச்சியை அடையக்கூடிய நாடாக இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு, சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்குகளை தாண்டிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் இனங்கண்டுள்ளதாகவும், அதற்காக அரசாங்கம் ஒரு முறையான திட்டத்தை வகுத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொருளாதார மறுமலர்ச்சியை அடைவதற்கான இலக்கை அடைய, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை மேலும் அழைப்பது அவசியம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக நாட்டில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...

நீர்கொழும்பு, கட்டான பகுதிகளில் நீர்வெட்டு

நீர்கொழும்பு மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (12) முற்பகல்...

‘தூதர்களை வெளியேற்றினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்’: ஐரோப்பா, அரபு நாடுகளுக்கு ஈரான் நிபந்தனை.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய புரட்சிகர...

Rebuilding Sri Lanka: இலங்கையை மீளக் கட்டியெழுப்ப WAMY அமைப்பிடமிருந்து நிதி உதவி!

கடந்த 2025 டிசம்பரில் இலங்கையின் பல பகுதிகளைச் சூறையாடிய 'டிட்வா'  சூறாவளியினால்...