நாட்டில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் உயர் தரங்களில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இன்றைய (10) உலக மனநல தினத்தை முன்னிட்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மாணவர்களிடையேயான மனா அழுத்தம் குறித்து மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல வைத்திய நிபுணர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார்.
இதேவேளை, கல்வியின் கடுமையான அழுத்தம், வீட்டில் பெற்றோருடனான பிரச்சினைகள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பிள்ளைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான அழுத்தம் ஆகியவை இந்த மன அழுத்தத்திற்குக் காரணம் என ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மக்கள் தொகையில் 19% பேர் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் கொண்டுள்ளனர் என்பதையும் குறித்த ஆய்வு எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.