மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

Date:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநரால் குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.கணேஸ்ராஜ் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

விடுமுறை வழங்கப்படும் குறித்த நாளுக்கு பதிலாக எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை அன்று பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளின் அதிபர்களுக்கு மத்திய மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

சமூக ஊடக பயன்பாடு குறித்து எச்சரிக்கை

சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி கடத்தல்காரர்களின் கணக்குகளுக்கு மோசடியாக பணத்தை மாற்றுவது மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் எனவும் நுவரெலியா மாவட்டத்தின் சில...

மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்!

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு...

இஸ்லாமிய இலக்கியம்: அரபு எண்களின் தோற்றமும் பரவலும்!

-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை....