‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

Date:

இஸ்ரேலிய ஊடகமான “இஸ்ரேல் ஹயோம்’ வெளியிட்ட செய்தி.,

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு மறுசீரமைப்பு திட்டத்தில் கத்தாருக்கு வழங்கப்பட்ட முக்கிய பங்கு குறித்து கவலை கொண்டுள்ளன.

ஒரு மூத்த சவூதி அதிகாரி இஸ்ரேல் ஹயோமிடம், “அதிகப்படியான கத்தார் ஈடுபாடு திட்டத்தின் சரிவுக்கு வழிவகுக்கும்” என்று கூறினார்.

கடந்த ஒரு மாதமாக, பல முக்கிய மிதவாத வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை தங்களை ஓரங்கட்டப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் முயற்சியை  அவை ஆதரிக்கும் அதே வேளையில், அவற்றின் பிராந்திய போட்டியாளரும், அரபு ஆட்சிகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இஸ்லாமிய இயக்கமுமான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆதரவாளரான கத்தாருக்கு வழங்கப்பட்ட முக்கிய சலுகைகளில் அவை  அதிருப்தி அடைந்துள்ளனர்.

தோஹாவுடனான வாஷிங்டனின் விரிவடையும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்தும் அவை கவலை கொண்டுள்ளனர்.

காசாவின் மறுகட்டமைப்பில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இந்த நாடுகள் பெரும்பாலும் இஸ்ரேலின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகின்றன.

அவை ஹமாஸின் முழுமையான நிராயுதபாணியாக்கத்தை ஆதரிப்பதோடு பாலஸ்தீன அதிகாரசபை பரந்த சீர்திருத்தங்கள் மற்றும் தீவிரவாதமற்ற செயல்முறைக்குப் பிறகுதான் காசாவுக்குத் திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

மேற்படி நாடுகளின் தலைமைகள் ஏற்கனவே மத ஆய்வுகள் உட்பட கல்வி சீர்திருத்தங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இஸ்ரேல் மற்றும் யூதர்கள் மீதான ஊடகப் பேச்சுக்களில் மாற்றத்தையும் ஊக்குவிக்கின்றனர். இருப்பினும், இஸ்ரேல் இரு-நாட்டு தீர்வை நோக்கி ஒரு அரசியல் செயல்முறையை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவை  கோருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...