இஸ்ரேல் – ஹமாஸ் முதற்கட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டது: பணயக் கைதிகள் விடுவிப்பிற்கு ஹமாஸ் இணக்கம்!

Date:

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாபதிதி டொனால்ட் ட்ரம்ப், இன்று அறிவித்துள்ளார்.

இது மத்திய கிழக்கில் இரண்டு ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

காசா மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்ப்பின் 20 அம்சத் திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வந்துள்ளது . இதை அவர் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இஸ்ரேல், ஹமாஸ் மற்றும் உலகின் பெரும்பாலான நாடுகள் இதை வரவேற்றன.

இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின்படி, ஹமாஸிடம் உள்ள அனைத்து பிணைக்கைதிகளும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக்கு அப்பால் படிப்படியாக விலக்கிக் கொள்ளும் என்றும் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளதோடு, விரைவில் பிணைக்கைதிகளை மீட்டுக் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பும் இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

எகிப்து, கட்டார், துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்துடன் எட்டப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், போர்நிறுத்தத்திற்கான முழுமையான காலக்கெடு மற்றும் காசாவின் போருக்குப் பிந்தைய நிர்வாகம் போன்ற முக்கிய சவால்கள் இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ள நிலையில், அப்பகுதி மக்களுக்கு ஒரு பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 60,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்களின் உயிரை பலி கொண்ட போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, X தளத்தில் இதை ஒரு சிறந்த நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கும், எங்கள் அன்புக்குரிய பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு கொண்டு வருவதற்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலிய படைகள் காசாவிலிருந்து வெளியேறுதல் மற்றும் பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றம் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என்று ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை முழுமையாகச் செயல்படுத்த இஸ்ரேலை கட்டாயப்படுத்த டிரம்ப், உறுதியளித்த நாடுகள் மற்றும் பிற அரபு நாடுகளுக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டில்!

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர்...

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி: பாகிஸ்தான் உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் கைப்பற்றக் கோரும்...

2026 தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை

2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை...