காசா நகரின் ஸைத்தூன் பகுதியில் உள்ள தங்களது வீட்டை புனரமைக்கும் முயற்சியில் இருந்தவேளை, சியோனிச ஆக்கிரமிப்பு இராணுவம் அபூ ஷஃபான் குடும்பத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 7 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த அப்பட்டமான படுகொலை, நிராயுதபாணியான பொதுமக்களை திட்டமிட்டு குறிவைக்கும் ஆக்கிரமிப்பு படையின் கொடூர முகத்தை வெளிப்படுத்துகிறது.
சமீபத்தில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, சியோனிச படை தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக பாலஸ்தீனப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி அவர்கள் கூறியதாவது:
“போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறி, ஆக்கிரமிப்புப் படை நமது மக்களை மீண்டும் மீண்டும் குறிவைக்கிறது. இது அதன் ஆக்கிரமிப்பு நோக்கங்களையே வெளிப்படுத்துகிறது.”
பாலஸ்தீனப் பிரதிநிதிகள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் மத்தியஸ்த நாடுகளை இந்த மீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் நமது மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையை நிறுத்த, ஆக்கிரமிப்பு தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.