நாளாந்த சேவையில் காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் !

Date:

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து நாட்களிலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 8ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையில் நாளாந்தம் குறித்த கப்பல் சேவை இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் செவ்வாய்க் கிழமை தவிர்ந்த வாரத்தின் ஏனைய ஆறு நாட்களும் குறித்த சேவை இடம்பெற்றுவந்தது.

இந்நிலையில் பண்டிகை காலத்தில் அனைத்து நாட்களிலும் சேவையை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இக்கப்பல் சேவையில் தீர்வை அற்ற கடைத் தொகுதியும் ( Duty free) புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

போதைப்பொருள் குறித்த தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

2026 ஆம் ஆண்டில் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படவுள்ள போதைப்பொருள் ஒழிப்புச் சுற்றிவளைப்புகளுக்காக,...

பஸ்கள் தரிப்பிடங்களுக்கு வரும் நேரங்களை அறிந்துகொள்ள புதிய செயலி

தென் மாகாணத்தில் பயணிகள் பஸ்கள் தரிப்பிடங்களுக்கு வரும் நேரங்களை அறிந்துகொள்வதற்கு புதிய...

சிரிய அரசு – குர்திஷ் ஆயுதக் குழு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம்.

சிரியாவில் செயல்பட்டு வரும் குர்திஷ் இன மக்களின் ஆயுதக் குழுவான சிரிய...

‘தேசத்திற்கான முஸ்லிம்களின் பங்களிப்பு’ குறித்த சிங்கள மொழியிலான ஆய்வு நூல் வெளியீட்டு விழா.

பல நூற்றாண்டுகளாக இலங்கை மண்ணில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இந்நாட்டின் அரசியல்,...