போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்களின் கீழ் உள்ள தனது பகுதிகளை பிரித்து காட்டுவதற்காகவும் பலஸ்தீனர்களுக்கு நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களை அடையாளப்படுத்துவதற்காகவும் மஞ்சள் நிறத்திலான கடவைகளை நிறுவியுள்ளது.
இந்த எல்லையை தாண்டுவோர் படுகொலை செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.
இவை காசாவின் பல இடங்களில், எல்லைச் சுவர்களிலும் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இஸ்ரேல் இராணுவம் தங்களின் “கட்டுப்பாட்டு எல்லையை” தெளிவுபடுத்தி, பலஸ்தீனர்களின் இயக்கத்தைத் தடை செய்ய முயற்சி செய்கிறது எனக் கூறப்படுகிறது.
இதனால் காசா மக்களிடையே மிகுந்த பதற்றம் நிலவுகிறது. ஏற்கனவே போர் தாக்குதல்களால் வீடுகள் அழிந்த நிலையில், இஸ்ரேல் இராணுவத்தின் புதிய “மஞ்சள் எல்லை” நடவடிக்கை பலஸ்தீனர்களின் சுதந்திரமான நடமாட்ட உரிமையைப் பறிக்கும் முயற்சி என மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.