வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்ட துருக்கியின் 102 ஆவது தேசிய தினம்

Date:

கொழும்பிலுள்ள இலங்கையின் துருக்கி தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட துருக்கியின் 102 ஆவது தேசிய தின நிகழ்வு நேற்று (29) கொழும்பு ஷாங்கிரிலா ஹோட்டலில்  வெகு சிறப்பாக நடைபெற்றது.

இலங்கைக்கான துருக்கி தூதுவர் செமிஹ் லுட்ஃபு துர்குட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி கலந்து சிறப்பித்தார்.

இரு நாடுகளின் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டதையடுத்து, துருக்கி தூதுவர் வரவேற்புரையாற்றினார். துருக்கி ஜனாதிபதியின் தேசிய தினச் செய்தியும் வாசிக்கப்பட்டது.

அதன்பின் அமைச்சர் சுனில் செனவி சிறப்புரையாற்றியதுடன், இலங்கை மற்றும் துருக்கிக்கான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விசேட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...