நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

Date:

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், வடமேல், ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மி.மீ. வரையான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல், தென் மாகாணங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடும்.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடல் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பகுதிகளில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

அனர்த்த நிவாரணத்திற்காக பூட்டானின் நிதி உதவி

பூட்டான் இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர், கர்மா ஹமு டோர்ஜி (H E...

பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைகொண்டு வருவதாக,...

பேரிடரால் சேதமடைந்த மத ஸ்தலங்களை கட்டியெழுப்ப ஹஜ் குழுவிடமிருந்து ரூ. 5 மில். நன்கொடை

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களின் மறுசீரமைக்கும் பணிகளுக்காக,...

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை எதிர்பார்ப்பு

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு, குறிப்பாக பெப்ரவரி 10 வரை கனமழை...