கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

Date:

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது என சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும்.

அந்த கட்டிடம் குறித்து நேற்று திங்கட்கிழமை (13) தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் குறிப்பிடும் போது அதில் எனது பெயரை மீண்டும் பயன்படுத்தியுள்ளனர்.

அந்த கட்டிடம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நான் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமும் வழங்கி உள்ளேன்.

அந்த கட்டிடத்திற்கு மின்சார இணைப்பு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் ஜி ராஜபக்ஷ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆவணத்தில் எனது கையொப்பம் இல்லை. அந்த ஆவணத்தில் உள்ள எழுத்துக்களும் தெளிவற்று காணப்படுகிறது.

எனவே கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது அல்ல என நான் உறுதியாக கூறுகின்றேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவி: வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.

நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வாகனங்கள்...

பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜுனைத்...

பலத்த மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை.

மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னலுக்கான செம்மஞ்சள்...