பொலிஸாரால் அறவிடப்படும் போக்குவரத்து மீறல் அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
