மத்திய வங்கிக்கு இரு புதிய பிரதி ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய மத்திய வங்கியின் உதவி ஆளுனர்களாக கடமையாற்றிய கலாநிதி சீ. அமரசேகர மற்றும் ஜீ.பீ.சிரிகுமார உள்ளிட்டோர் பிரதி ஆளுனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
