”மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்” என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும் சனிக்கிழமை(18) கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் காலை 08.30 மணி முதல் மதியம் 12 மணி வரை இடம்பெறவுள்ளது.
இக்கருத்தரங்கினை ‘rraaone TECHNOLOGIES’ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
பேச்சாளர்களாக கலாநிதி தர்ஷன சமரவீர (பிரதி இயக்குநர் ஜெனரல், NIE), ரஞ்சித் பத்மசிறி (துணை இயக்குநர் ஜெனரல் NIE)ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
2026 ஆம் ஆண்டில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் நிலையில் Modular கற்கை, திறன்களுக்கான வழிகள், 1ஆம் 6 ஆம் வகுப்புகளுக்கான புதிய மதிப்பீட்டு முறைகள் போன்ற பிரதான தலைப்புக்களில் இக்கருத்தரங்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயத்தின் முக்கியத்துவம் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு தொடர்பில் மேலதிக தகவல்களை பெற விரும்புவோர் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.1094 76 164 8616, +94 76 164 8616, +94 74 047 7034, +94 77 848 3271, info@rraaone.com.