சமூகத்தின் கல்வி, சமய மற்றும் சமூக நலத்திற்காக ஆற்றிய முன்னோர்களின் மறுமலர்ச்சியான பங்களிப்புகளை நினைவுகூரும் நோக்குடன் ‘அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றத்தின்’ ஏற்பாட்டில் நடைபெறும் தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 4 மணி முதல் 6. 15 வரை கொழும்பு தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்டர் சலீம் மர்சூப் PC, கௌரவ விருந்தினராக டொமினிகன் குடியரசின் கௌரவ தூதர் திரு. எஸ்.எம்.ஐ.எஸ். ஹபீபுல்லா பஃபலுல் (MBA) சிறப்பு விருந்தினர்களாக எம். அலி அஸீஸ் (BSc), சட்டத்தரணி எம்.ஆர்.எம். சல்மான் (LLB), ஆகியோர் கலந்துகொள்ளவுள்னர்.
முன்னோரின் பணிகளை இளம் தலைமுறையினருக்கு எத்திவைக்கும் மகத்தான பணியில் உழைக்கும் அல் அஸ்லாப் மன்றத்தின் இந்நிகழ்வில் கலந்துபயன்பெறுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.