நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

Date:

2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று (21) ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், கண்டறியப்பட்ட நோயாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அதிக ஆபத்துள்ள 11 மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே குறித்த காலப்பகுதியில் டெங்கு நோயினால் 22 மரணங்களும் பதிவாகியுள்ளதாகவும் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை முடிந்தவரை அழித்து சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் வைத்தியர்களின் உரிய ஆலோசனையை பெறுமாறு பொதுமக்கள் அறிவறுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

டெங்குவை ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு...

அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் அதிக மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று...

டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2025; தமிழ் மொழி மற்றும் இலக்கிய பயணத்தின் புதிய தொடக்கம்

2025 டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் கனடாவின் டொரோண்டோ...