கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா, 2024 க.பொ.த (சாதாரணதர) பரீட்சையில் 9 A சித்தி பெற்று 94 ஆண்டுகளில் சாதனை படைத்துள்ளார்.
இளம் தொழிலதிபரும் சமூக சேவகருமான மஹ்மூத் மாஜித், தனது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ரூ50,000 காசோலை வழங்கி கௌரவித்தார். நிகழ்வு கல்முனை மாப்பிள்ளை விருந்து விடுதியில் நடைபெற்றது.
மேலும், அவர் ஒவ்வொரு ஆண்டும் 9 A சித்தி பெறும் மாணவர்களுக்கு 50,000 பணப் பரிசு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.