இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நோபல் பரிசுக்கான தெரிவு முறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எதிர்வரும் 10ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. இதற்கு மொத்தம் 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் தலைவர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பரிந்துரைத்ததாக கூறியுள்ளனர். ஆனால் ஜனவரி 31 என்ற காலக்கெடுவுக்கு பிறகு அவர்கள் பரிந்துரை செய்துள்ளதால் நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு ட்ரம்ப்பின் பெயர் பரீசீலிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேவேளை ட்ரம்ப் தற்போது சர்வதேச உறவுகளை சீர்குலைத்து வருகிறார் என குற்றம்சாட்டும் நோபல் விருது குழு ட்ரம்ப் தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டால் மட்டுமே நோபல்பரிசு பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என கூறியுள்ளது.
இந்த முறை நோபல் பரிசுக்கு மனித உரிமை அமைப்புகள், பத்திரிகையாளர்கள், ஐ.நா போன்ற அமைப்புகளை குழுவினர் முன்னிலைப்படுத்தி இருக்கலாம் என கூறப்படும் நிலையில் ஆச்சரியமிக்க அறிவிப்புகளையும் வெளியிட வாய்ப்புள்ளதாக ஒரு சாரார் கூறுகின்றனர்.