எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில் கத்தார் நாட்டைச் சேர்ந்த மூன்று தூதர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான உச்சி மாநாட்டின் ஏற்பாடுகளில் பங்கேற்க இந்தத் தூதர்கள் சர்ம் எல்-ஷேக்கிற்குப் பயணித்துக்கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணித்த வாகனம், நகரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கூர்மையான வளைவில் கவிழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த நாளை உலகத் தலைவர்கள் எகிப்தில் கூடுகின்றனர்.