கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

Date:

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பெண் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டை விட்டு தப்பியோடிய அவர் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) மற்றும் நேபாள பொலிஸார் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 19 அன்று வாழைத்தோட்டம் நீதிமன்ற வளாகத்திற்குள் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதற்கு உதவியதாகக் கூறப்படும் ‘இஷாரா செவ்வந்தி’ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு கடந்த செப்டெம்பர் மாதம் தெரிவித்தது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே மற்றும் பிறரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த தகவல் தெரியவந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவு ‍வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு தலா ரூ. 25000!

மோசமான காலநிலை காரணமாக பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு...

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்டும் ஐ.நா!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன்...

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘ஓட்டிசம்’ அலகை மேம்படுத்த ரூ. 398.09 மில்லியன் ஒதுக்கீடு!

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய...

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி அலிஸன் ஹூக்கர் இலங்கை வருகை!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ...