ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் மிக நெருங்கிய சகாவுமான வரக்காப்பொலயை சேர்ந்த ஸர்ஸம் காலித் அவர்களின் ஜனசா நேற்று (01) கஹட்டோவிட்ட ஜாமிஉத் தௌஹீத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் மற்றும் பலரும் நல்லடக்க நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மர்ஹும் ஸர்ஸம் காலித் அவர்கள் கஹட்டோவிட்டவைச் சேர்ந்த அஷ்ஷெய்க் எம்.என்.எம்.பைரூஸ் (கபூரி) அவர்களின் மாமனாரும் ஆவார்.