கானா தங்க மோசடியில் தொடர்பு; ஹிஸ்புல்லாஹ் எம்.பி மறுப்பு

Date:

​கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது.

அதில் கூறப்படும் தகவல்களை முற்றிலும் மறுக்கிறோம், அதில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம் என ஹிஸ்புல்லாஹ் எம்.பி மறுப்பு தெரிவித்து ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

​உண்மையில், எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவை சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கே சிலர் ஏமாற்ற முனைந்ததை அறிந்து உடனடியாக, இந்த ஏமாற்று நடவடிக்கை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, ஏமாற்ற முனைந்த 11 பேரையும் பொலிசார் கைது செய்தார்கள்.

​இதனைத்தவிர, கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்.

​அரசியல் நோக்கங்களுக்காகச் சில தகவல்கள் தவறாகவும், பிழையாகவும் பரப்பப்படுவதையிட்டு நாம் மிகுந்த வருத்தம் அடைகிறோம் எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...