‘காஷ்மீர் கறுப்பு தினம்’: கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி

Date:

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாட்டில் (27) ‘காஷ்மீர் கறுப்பு தினத்தை’ குறிக்கும் வகையில் கருத்தரங்கு / புகைப்படக் கண்காட்சியொன்று இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிந்தனையாளர்கள், தொழில் வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், காஷ்மீரின் நலன்விரும்பிகள் மற்றும் பாகிஸ்தான் சமூகத்தினர் என பல்வேறு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது, இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரில் இந்தியப் படைகள் செய்த அட்டூழியங்களைச் சித்தரிக்கும் ஆவணப்படங்கள் மற்றும் புகைப்படங்களும் பங்கேற்பாளர்களுக்கு காண்பிக்கப்பட்டன.

மேலும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரின் செய்திகளும் பார்வையாளர்களுக்காக வாசிக்கப்பட்டன.

இந்த கருத்தரங்கில் பாகிஸ்தானிய முன்னாள் மாணவி திருமதி சூரியா ரிஸ்வி உரையாற்றினார்.

1947 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் கைகளில் அப்பாவி காஷ்மீரிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதையும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த இந்திய அட்டூழியங்களையும் பேச்சாளர் சுட்டிக்காட்டினர்.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம் உல் அஸீஸ் கருத்துத் தெரிவிக்கையில்,  பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் பல தசாப்தங்களாக இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிரான நியாயமான போராட்டத்திற்காக ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு மரியாதை செலுத்தியதோடு காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கு பாகிஸ்தானின் அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவினை மீண்டும் வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்!

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு...

இஸ்லாமிய இலக்கியம்: அரபு எண்களின் தோற்றமும் பரவலும்!

-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை....

போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிய இன்று முதல் புதிய முறை!

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளைக் கண்டறியும் உமிழ்நீர் பரிசோதனை இன்று (17) முதல்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...