இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆலோசனையின் பேரில் சவூதி அரேபியாவின் பிரதம முப்தியாகவும் மூத்த அறிஞர்களின் தலைவராகவும் தாருல் இப்தா ஆய்வு மையத்தின் தலைவராகவும் பிரபல மார்க்க அறிஞர் கலாநிதி சாலிஹ் அல்-ஃபவ்சான் அவர்களை ஒக்டோபர் 22 ஆம் திகதி முதல் நியமனம் செய்துள்ளது.
அஷ்ஷேக் கலாநிதி சாலிஹ் அல்-ஃபவ்சான், சவூதி அரேபியா மற்றும் இஸ்லாமிய உலகில் மிகவும் பிரபலமான அறிஞர்களில் ஒருவர்.
அவர் 1935 ஆம் ஆண்டு அல்-கசிம் கவர்னரேட்டில் பிறந்து ரியாத்தில் உள்ள ஷரியா கல்லூரியில் பட்டம் பெற்றார்.
பின்னர் அவர் இஸ்லாமிய நீதித்துறையில் முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். தனது பணிக்காலத்தில், அவர் பல கல்வி மற்றும் சட்டப் பதவிகளை வகித்தார். மேலும் மூத்த அறிஞர்கள் சபையில் மற்றும் கல்வி ஆராய்ச்சி மற்றும் இப்தாவிற்கான நிரந்தரக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
இந்நியமனம் சவூதி அரேபியாவின் முன்னாள் பிரதம முஃப்தி, மாண்புமிகு அஷ்ஷேக் அப்துல்அஜிஸ் பின் அப்துல்லா அல்-ஷெய்க் – (அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக) செப்டம்பர் 23, 2025 அன்று காலமானதைத் தொடர்ந்து வழங்ப்படுகிறது.
இந்த நியமனமானது சவூதி அரேபியாவில் மத ஸ்தாபனத்தின் பங்கை வலுப்படுத்தவும், விஷன் 2030 க்கு ஏற்ப, சவூதி அரேபியாவிற்கும் இஸ்லாமிய சமூகத்திற்கும் சேவை செய்வதற்கும் ஃபத்வா மற்றும் ஷரியா அறிவார்ந்த ஆராய்ச்சியின் அளவை உயர்த்துவதற்கும் பங்களிப்புச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
