‘தர்மத்தின் மூலம் நல்லிணக்கம்’ என்ற தலைப்பில், நாடுகளிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் வளர்க்கும் நோக்கில், தன்வீர் அகடமி சார்பில் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிய சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சி இன்று (08) மற்றும் நாளை (09) திஹாரியவில் உள்ள தன்வீர் நிறுவன வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இந்தக் கண்காட்சி, சமூக ஒற்றுமை மற்றும் சமாதானத்தை முன்னிறுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.