இலங்கையின் மிகப் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றாகக் கருதப்படும் பேருவளையில் அமைந்துள்ள மஸ்ஜித்-அல்-அப்ரார் பள்ளிவாசலை, இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் பார்வையிட்டார்.
தூதுவர் தனது வருகையின் போது, பள்ளிவாசலின் வரலாறு, அதன் கட்டிடக்கலை மற்றும் சமூக ஒற்றுமைக்கான பங்களிப்புகளைப் பற்றியும் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வு, நாட்டில் நிலவும் சர்வமத ஒற்றுமையும் அமைதியான இணைந்த வாழ்வின் மரபையும் உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளது.