நாட்டின் 5 மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 75 மி.மீ. மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Date:

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்த பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது வடமேற்குத் திசைகளிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

‘Rebuilding Sri Lanka’ நிதியத்தில் வெளிநாட்டு வைப்பீடுகள் அதிகரிப்பு

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உருவாக்கப்பட்டுள்ள ‘Rebuilding...

நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர்,...

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ...

நாச்சியாதீவு மக்களுக்கு சிங்கள சகோதரர்களது மனிதாபிமான உதவி

நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் அனுராதபுர மாவட்டத்தின் பெரிய கிராமங்களில் ஒன்றான...