தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

Date:

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

தண்ணீர் சேகரிக்கும் போதும், வயல்களில் வேலை செய்யும் போதும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று  இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், மழைக்காலங்களில் நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கவும், நோய் அபாயத்தைக் குறைக்கவும் தண்ணீரைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்குமாறு அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....