– பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை

Date:

நாட்டிற்கு கிழக்காக கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தொகுதியின் தாக்கம் காரணமாக இன்றையதினம் (15) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குத் திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...