அனர்த்த உதவித் திட்டம் தொடர்பிலான ஜம்இய்யதுல் உலமாவின் இரண்டாம் கட்ட ஒன்றுகூடல்

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இடையில் அனர்த்த உதவித் திட்டம் வழங்குவது தொடர்பிலான இரண்டாம் கட்ட ஒன்றுகூடல் இன்று (30) ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதில், பின்வரும் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு உடனடி தீர்மானங்களும் எட்டப்பட்டன.

1) நிவாரணம் தாமதமாக கிடைக்கப் பெற்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை இனங்கண்டு அவற்றை துரிதமாக பெற்றுக் கொடுத்தல்.

2) அனர்த்த நிலைமைகளினால் கடுமையான பாதிப்புகளுக்குள்ளான கம்பளை, ரம்புக்கல, மூதூர் போன்ற பகுதிகளில் அரசாங்க தரப்புடன் இணைந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தல்.

3) இன்றிரவும் நாளையும் பெரும் வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு குறித்த தகவலை தெரியப்படுத்துவதுடன் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குதல்.

இச்சந்திப்பில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...