அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமா, மஸ்ஜித் சம்மேளனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் விசேட கலந்துரையாடல்

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைக் காரியாலயத்தில் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பான விசேட ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை, வெள்ளப் பாதிப்புகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் அவசர தேவைகள் ஆகியவற்றை முன்னிட்டு, உடனடியாக எவ்வாறு பயனுள்ள பங்களிப்புகளை வழங்கலாம் என்பது விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுடன் இணைந்து செயல்படுவது, உதவி பொருட்கள் விநியோகம், தங்குமிட வசதிகள், உணவு மற்றும் மருத்துவ ஆதரவு வழங்கும் முறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சமூக ஒருமைப்பாட்டும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் தற்போது மிக அவசியமானவை என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...