உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

Date:

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சையை நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இந்த ஆண்டு பரீட்சை எழுத மொத்தம் 340,525 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இதில் 246,521 பேர் பாடசாலை மாணவர்களும் 94,004 பேர் தனியார் மாணவர்களும் ஆவர்.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து பயிற்சி வகுப்புகளையும் நடத்துதல், சிறப்பு கருத்தரங்குகளை நடத்துதல், விரிவுரைகள் மற்றும் பட்டறைகளை நடத்துதல் மற்றும் மாதிரி வினாத்தாள்களைப் பற்றி விவாதித்தல் உள்ளிட்ட பரீட்சை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நாளை (04) நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...