ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல் ஹாஜிரி (Saeed Bin Mubarak Al Hajeri)மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையே நேற்று (04) கலந்துரையாடல் நடைபெற்றது.
இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார முன்னேற்றம் மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட முக்கிய துறைகளில் இலங்கையின் சமீபத்திய முன்னேற்றம் குறித்து அமைச்சர் விஜித ஹேரத் விளக்கினார்.
நாட்டில், ஐக்கிய அரபு எமிரேட் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் பரந்த அளவிலான பொருளாதார வாய்ப்புகளை அமைச்சர் எடுத்துரைத்தார்.
இரு நாடுகளின் அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் மக்களுக்கு இடையிலான கூட்டாண்மையை தொடர்ந்து முன்னேற்றுவதன் முக்கியத்துவத்தையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இணை அமைச்சர் வலியுறுத்தினார்.
