திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

Date:

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும், எனவே, உள்நாட்டு திரைப்படத் துறையைப் பாதுகாக்கும் அதே வேளையில், வெளிநாட்டு திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு இலங்கை ரசிகர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

தொழில்துறையாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கினார்.

குறிப்பாக பெறுமதி சேர் வரி (VAT) செலுத்துவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் தொழில்துறையை விரிவுபடுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஜனாதிபதியிடம் விளக்கினர்.

2025ஆம் ஆண்டில் சினிமா ஒரு துறையாக வரலாற்றில் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், அதனைத் தொடர அரசாங்க ஆதரவை வழங்குமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.

அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மஹதிவுல்வெவ மற்றும் பொது முகாமையாளர் ருவன் பிரேமவீர ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நடிகர் சனத் குணதிலக்க, ஜானகீ விஜேரத்ன (Lyca Productions), ஜனித் பிரசன்ன விதானகே (JP Ceneplex-Kandy), துஷான் ரணகன மீமனகே (LFD), ருவிந்து குணரத்ன (EAP), அநுர ஜசெந்துலியன (Lite Cinema), இம்தியாஸ் காதர் (CEL), கங்கா ரத்துவிதான (Ceylon Theaters) மற்றும் அனுஷ்க எகொடவத்த (PVR) ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...