நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
தண்ணீர் சேகரிக்கும் போதும், வயல்களில் வேலை செய்யும் போதும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், மழைக்காலங்களில் நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கவும், நோய் அபாயத்தைக் குறைக்கவும் தண்ணீரைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்குமாறு அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
