நாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை.

Date:

இன்றையதினம் (11) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா, தென், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Popular

More like this
Related

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா?

அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது!

காணி தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு.

வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பானில் கடந்த ஒரு வாரத்திற்கு...