லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

Date:

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே சுமார் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸின் உறுப்பினர்கள் பயிற்சியில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

இந்த இடம் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களைத் திட்டமிடவும், நடத்தவும் ஹமாஸால் பயன்படுத்தப்பட்டது என்றும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கூறி ஹமாஸ் நிராகரித்துள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்திற்குப் பின்னர், லெபனானில் உள்ள நபர்கள் மற்றும் இடங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

பெரும்பாலான தாக்குதல்கள் ஹிஸ்புல்லாவை இலக்காகக் கொண்டிருந்தாலும், இஸ்ரேல் , ஹமாஸ் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...