வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்வா கலையரங்கில் வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய பலர், முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் ஒற்றுமை, ஒன்றிணைந்த வாழ்வின் அவசியம் குறித்து வலியுறுத்தினர்.
மேலும், இனி இப்படிப்பட்ட இடம்பெயர்வுகள் மீண்டும் நடைபெறக்கூடாது என்பதையும் உணர்ச்சி பூர்வமாக தெரிவித்தனர்.
கூட்டத்தில் வடக்கு பகுதி சமூகத் தலைவர்கள், மத தலைவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தோர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கடந்த 35 வருடங்களாக வடக்கு முஸ்லிம் மக்களின் விவகாரங்கள் போதுமான அளவிற்கு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவோ அல்லது அவர்களுக்கான போதுமான தீர்வுகள் கிடைத்து விட்டதாகவோ வடக்கு முஸ்லிம்கள் இன்று வரை கருதவில்லை.

