அல்-கஸ்ஸாம் படைப் பிரிவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அபு உபைதா கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஹமாஸ்.

Date:

காசாவை மையமாகக் கொண்டு இஸ்ரேல் மேற்கொண்ட கடந்த இரண்டு ஆண்டுகாலப் போரின் போது, ஹமாஸ் அமைப்பின் முக்கிய செய்தித் தொடர்பாளர் அபூ உபைதா (உண்மை பெயர்: ஹுதைஃபா அப்துல்லா அல்-கஹ்லூத்) உயிரிழந்துள்ளதாக, ஹமாஸ் இன்று (30) உறுதிப்படுத்தியுள்ளது.

ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப் பிரிவு வெளியிட்ட  அறிக்கையில், போர்காலம் முழுவதும் ஹமாஸின் முக்கிய ஊடக முகமாக செயல்பட்ட அபூ உபைதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அபு உபைதா  உயர்ந்த அறிவு, தைரியம், தெளிவான முடிவெடுக்கும் திறன் கொண்ட மனிதர். கடுமையான ராணுவ மற்றும் அரசியல் அழுத்தங்களிலும் அமைதியாக செயல்பட்டு, பலஸ்தீன் மக்களுக்காக உறுதியான தலைமையை வழங்கியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபு உபைதாவின் உண்மையான அடையாளம் யாருக்கும் தெரியாது. தனது வீடியோக்களில் எப்போதும் சிவப்பு நிற கெஃபியே அணிந்திருப்பார். கெஃபியே என்பது பாரம்பரிய பாலத்தீன தலைப்பாகை துணி.

2002.ஆம் ஆண்டு, அபு உபைதா அல்-கஸ்ஸாம் படைப் பிரிவின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். அபு உபைதாவின் உண்மையான அடையாளத்தைக் கண்டுபிடிக்க இஸ்ரேல் தொடர்ந்து முயன்று வந்தது.

இஸ்லாமிய MA இலக்கணம் பட்டம் பெற்றவர் அபூ உபைதா. காஸாவின் நலியா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். நலியா கிராமம் 1948ஆம் ஆண்டில் இஸ்ரேலால் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2008,2013 இவரைக் கொன்று விட்டதாக இஸ்ரேல் அறிவித்து இருந்தது.பலமுறை கொலை செய்ய முயற்சித்தும் இஸ்ரேல் தோல்வி அடைந்தது.

இறுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு வீட்டு மீது நடத்திய தாக்குதலில் அபூ உபைதா உள்பட குழந்தைகள் மனைவி என குடும்பத்தார் அனைவரும் கொலை செய்யப்பட்டனர்.

இஸ்ரேல்-காஸா போரின் மிக முக்கியமான நபர்களில் ஒருவராகவும் இவர் இருக்கிறார். அபு உபைதா என்னும் பெயரில் அறியப்படும் இந்த செய்தித் தொடர்பாளர் ஹமாஸ் குழுவின் செய்திகளை சமூக ஊடக வாயிலாக உலகிற்கு அறிவிக்கும் பணியைச் செய்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழத்திற்கு வரிச்சலுகை

ரமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகையை...

இஸ்ரேலில் இலங்கையர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள்!

இஸ்ரேல் நாட்டில் உள்ள வர்த்தக மற்றும் சேவைத் துறைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு...

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை நாளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகையை தபால் நிலையங்கள் மூலம் இதுவரை பெறாத...

போக்குவரத்து அபராதங்களைச் செலுத்த GovPay முறைமை 7 மாகாணங்களில் அமுல்

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான அபராதங்களைச் செலுத்தக்கூடிய GovPay முறைமையானது தற்போது இலங்கையின்...