இஸ்ரேல் நாட்டில் உள்ள வர்த்தக மற்றும் சேவைத் துறைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்த அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வீட்டுப் பணி, விவசாயம் மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் நிலவும் ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக, தற்போது ‘G’ பணிச்சட்டகத்தின் கீழ் புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.
