நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு விரைவான மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இலங்கையின் ஆழ்ந்த நன்றியை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானுடன் (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) நேற்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது, நெருக்கடியான காலங்களில் இலங்கைக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடர்ந்து அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அனுரகுமார கூறினார்.
இந்த உரையாடலின் போது, வெள்ளத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு ஜனாதிபதி அனுரகுமாரவுக்கும் இலங்கை மக்களுக்கு ஷேக் மொஹம் பின் சயீத் தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், பேரிடரால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் போது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மீள்தன்மைக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
