போதைப்பொருளை ஒழிப்பதற்கான அரசின் முயற்சிகளுக்கு அமெரிக்க இராஜதந்திரி ஆதரவு

Date:

இலங்கை எதிர்கொள்ளும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க உதவி வழங்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த அலிசன் ஹூக்கர், அனர்த்தத்தினால் இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

இந்த நெருக்கடியான  நேரத்தில் பல்வேறு நிவாரண மற்றும் நிவாரணக் குழுக்களை நாட்டிற்கு அனுப்புவதில் அமெரிக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் அளித்த ஆதரவிற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.

 

அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளும் இலங்கைக்கு அளித்த மனப்பூர்வமான ஆதரவை ஜனாதிபதி பாராட்டினார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி பொருளாதார குறிகாட்டிகளை உயர்த்தி வரும் நிலையிலே இலங்கைக்கு இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி  மற்றும் நீண்டகால அடிப்படையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் எதிர்காலத்தில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் சேதமடைந்த நெடுஞ்சாலைகள், புகையிரதப் பாதைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளையும், விவசாயம், கால்நடைகள், சிறிய மற்றும் மத்திய தர கைத்தொழில்கள் உள்ளிட்ட முக்கிய வருமான வழிகளையும் மீட்டெடுக்க சிறிது காலம் எடுக்கும் என்றும், இது தொடர்பாக அனைத்து நட்பு நாடுகளின் உதவிகளையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தீர்வை வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து அமெரிக்கா கவனம் செலுத்துவதாகவும், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு ஆதரவளிப்பதாகவும் துணை வெளியுறவுச் செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும், தொடர்ந்தும் இதுபோன்ற வருகைகளை எதிர்பார்ப்பதாகவும் இதன்போது தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தற்போதைய அனர்த்த நிலைமையிலிருந்து மீண்டு இலங்கை மக்கள்  உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அடைய அமெரிக்க அரசாங்கம் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டினார்.

தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோருடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஜனவரியில்..!

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையை நடத்துதல் தொடர்பாக இலங்கை பரீட்சை...

கார் விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அசோக ரன்வல கைது

கார் விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் சபாநாயகரும், பாராளுமன்ற உறுப்பினருமான அசோக...

முன்மாதிரியான மக்கள் பிரதிநிதியாக இருந்தால், அனைத்து சலுகைகளையும் மக்களுக்கே அர்ப்பணிக்க வேண்டும் – முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷாம் நவாஸ்.

டிட்வா சூறாவளி தாக்கத்தால் முழு இலங்கையும் கடுமையான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. பல்வேறு...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோரின் நீர், மின் கட்டணங்களை தள்ளுபடி செய்யுமாறு ரவூப் ஹக்கீம் ஜனாதிபதிக்கு கடிதம்.

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் டிசம்பர்...